Header Ads

புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ…



இயக்குநர் சாலோமோன் கண்ணன் இயக்கி வந்த “திருமாயி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை திருப்பூர் சிவக்குமார் சாஷினி புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக தேனி பாலா என்பவர் அறிமுகமானார். இவர் ஏற்கனவே பல தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கலைப்புலி தானுவிடமும் இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் “திருமாயி” படத்தில் தேனி பாலா ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே தேனி பாலா இன்று புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

46 வயதான இவர் தேனி அடுத்த சீவலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய சொந்த பெயர் ராம்சந்த். திரைப்படத்திற்காக தேனி பாலா எனப் பெயரை மாற்றிக் கொண்ட இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார். இவரது இறப்புக்கு படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.