பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி 11.6 கோடி வாக்குகள் பெற்று சாதனை!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் கார்ட் ஜெயித்துள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. இந்த சீசனில் ஃபைனல் ரவுண்டிற்கு ஆரி , பாலாஜி , சோம் , ரியோ , ரம்யா பாண்டியன் உட்பட மொத்தம் 5 பேர் பங்கேற்றனர்.
இதில் ஆரம்பத்தில் இருந்தே ஆரியின் குணத்திற்கு தான் மக்கள் ஆதரவு இருந்து வந்தது. மேலும், ஆரி தான் டைட்டில் வின் பண்ணவேண்டும் என மக்கள் குரல் கொடுத்து லட்சக்கணக்கில் ஓட்டளித்தனர். நாம் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் 4 சீசன் டைட்டிலை வென்றுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.
ஆம், வெளிவந்துள்ள தகவலின்படி 11.6 கோடி வாக்குகள் பெற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே அபார ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆரி டைட்டிலை வென்றுள்ளார். அதற்கு அடுத்ததாக 4 கோடி வாக்கு
இரண்டாம் இடமும், 89 லட்சம் வாக்கு மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. இதில் அநேகமாக பாலா தான் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பார் என கண்ணிக்கமுடிகிறது. இந்த இறுதி எபிசோட் நாளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments