Header Ads

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

 


மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார்.

இந்த படம் கடந்த வருடம் வெளியாக இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் வெளியானது. இந்நிலையில் நீண்ட தாமதத்தால் தயாரிப்பாளர் லலித் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காக அடுத்த படத்தை நடித்துக் கொடுக்க விஜய் முடிவு செய்து இருக்கிறாராம்.

இந்த படத்தை இயக்க சிவா மற்றும் ஹெச் வினோத் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரையில் இருக்கிறதாம். இதில் யார் விஜய் படத்தை இயக்குவார்கள் என்று விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்

No comments

Powered by Blogger.