Header Ads

இன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது….கமல் டுவிஸ்ட்

 


பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 104 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் நாளையும் இறுதிப்போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளன. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 6 பேர்களில் ரூபாய் 5 லட்சம் பெற்று கேபி வெளியேறிய நிலையில் தற்போது ஆரி, ரம்யா, பாலாஜி, ரியோ மற்றும் சோம் ஆகிய 5 பேர் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது நாளை தெரியும் என்றாலும் இன்றும் ஒரு சில விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் கமல்ஹாசன் அவர்கள் இன்று ஒரு பெரிய திருப்பம் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியபோது, ‘இறுதிக்கு தகுதி பெற்று அறுவரில் ஒருவர் பணத்துடன் வெளியேறி விட்டார். எஞ்சிய ஐவரில் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் உங்களின் ஓட்டுக்கள் வந்து சேர்ந்து விட்டன. இந்த பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்களை நாம் பார்த்துவிட்டோம். இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது;’ என்று ஒரு ட்விஸ்ட் உடன் கமல்ஹாசன் முதல் புரமோவை முடித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்? இன்று ஒருவர் எவிக்ட் செய்யப்படுவாரா? என்பதே தற்போது பிக்பாஸ் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

No comments

Powered by Blogger.