Header Ads

நம்பர்களால் தீர்வு காணும் கணக்கு வாத்தியார்.. கோப்ரா டீசர் வெளியீடு!



 டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா பிரச்சனைகளையும் எண்களால் தீர்க்கும் கணக்கு வாத்தியார் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் விக்ரம் போட்டுள்ள பல கதாபாத்திரங்களில் சிலவற்றையும் இந்த டீசரில் படக்குழு வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.