Header Ads

ரஜினி, கமல் பட நடிகர் காலமானார் !

 


பிரபல மலையாள நடிகரும் மூத்த சினிமா கலைஞருமான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி இன்று தனது 98 வயதில் கலமனார்.

மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. இவர் தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம் ராப்பகல், கல்யாணராமன் உள்ளிட்ட பல படங்களி தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான பம்பல் கே சம்பந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ரஜியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது 98 வயதான உன்னிகிருஷ்ணன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமாத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

No comments

Powered by Blogger.