Header Ads

நயன்தாரா பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த ஆண்ட்ரியா




 சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.


அதிலும் வட சென்னை படத்தில் ஆடையில்லாமல் இவர் நடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிசாசு 2 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆண்ட்ரியா, சர்ச்சை கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘திரையுலகில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்போது தான் இவர் இந்த நடிகரின் படத்தில் நடித்துள்ள நடிகை என்று அடையாளம் காண முடிகிறது.

நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. அதே போல் ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டும் தான், நான் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன் ” என மிக வெளிப்படையாக பேசியுள்ளார். இது நயன்தாராவின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.


No comments

Powered by Blogger.