Header Ads

இளையராஜாவால் மகிழ்ச்சியில் வெற்றிமாறன்!

 



தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறார் வெற்றிமாறன். கடைசியாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது கோல்டன் க்ளோப் விருது வரை சென்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கும் திரைப்படத்தில் சூரியும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்காக முதல் முதலாக வெற்றிமாறன் இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக அவர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களைப் பார்த்தார். இந்நிலையில் இப்போது அந்த படத்துக்காக மொத்தமாக
8 ட்யூன்களை அமைத்துக் கொடுத்துள்ளார். இளையராஜாவின் இந்த வேகத்தைப் பார்த்த படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.