Header Ads

பொங்கலுக்கு இரட்டை விருந்து தரும் சிம்பு

 


சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் முன்பதிவு திரையரங்குகளில் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு ’ஈஸ்வரன்’ திரைப்படத்தின் மூலம் பொங்கல் விருந்து கொடுத்து உள்ள நடிகர் சிம்பு, தற்போது தான் நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டரையும் அதே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் சற்று முன் வெளியாகி உள்ளது

பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 14-ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு ’மாநாடு’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என ’மாநாடு’ படத்தின் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தனது ரசிகர்களுக்கு ஈஸ்வரன் மற்றும் மாநாடு ஆகிய இரண்டு பொங்கல் விருந்துகளை சிம்பு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ’மாநாடு’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வந்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் திரையிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

No comments

Powered by Blogger.