பிரியங்காவிற்கு என்ன நடந்தது? தொலைகாட்சியை விட்டு விலகிவிட்டாரா? குழம்பும் ரசிகர்கள்!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 8வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் தொடக்க நிகழ்ச்சியில் பல இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் விஜய் டிவி பிரபலங்களும் பங்கேற்றனர். பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார்.
அவருடன் இணைந்து மாகாபா தொகுத்து வழங்குவார். ஆனால் இந்த முறை மாகப மற்றும் மணிமேகலை ஆகியோர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடக்க விழாவை தொகுத்து வழங்கியுள்ளனர். இதனால் பிரியங்கா ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா அல்லது விஜய் டிவியை விட்டு விலகிக் கொண்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments