Header Ads

’பொங்கல்’ போட்டியில் திடீரென குதித்த ‘சூரரை போற்று’



 இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ஆகியவை திரையரங்குகளிலும், ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் ஓடிடியிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இருப்பினும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் ஈஸ்வரன் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் தற்போது பொங்கல் போட்டியில் திடீரென சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் களமிறங்கியுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 14 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு சன் டிவியில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பொங்கல் தினத்தில் சூப்பர் ஹிட் திரைப்படம் சூரரைப்போற்று

ஒளிபரப்பாகும் என்று சன் தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

இதனை அடுத்து விஜய், சிம்பு, ஜெயம்ரவி ரசிகர்களை அடுத்து சூர்யாவின் ரசிகர்களும் பொங்கல் தினத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.