ஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்
டைட்டில் வென்ற ஆரி, ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானின் பாணியில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்றைய இறுதி நிகழ்ச்சியில் சுமார் 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பெற்று டைட்டிலை வென்றார் ஆரி என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
டைட்டில் வென்ற ஆரிக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெற்றிக் கோப்பையுடன் வீட்டிற்கு வந்த ஆரி, முதன்முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் ’எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டிற்கு லைக்ஸ்கள், ரீடுவிட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் பரிசை வென்ற பின்னர் ’எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று ஆஸ்கார் மேடையிலேயே கூறிய பாணியில் ஆரியின் டுவிட் இருப்பதாக பலர் கமெண்ட்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments