Header Ads

தன்னுடைய பட ஹீரோவை பார்த்து கண்கலங்கிய பாரதிராஜா



 தன்னுடைய படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து அவரை நேரில் பார்த்த பாரதிராஜா கண்கள் கலங்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று ’என்னுயிர் தோழன்’. கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர்கள் பாபு, தென்னவன் மற்றும் ரமா ஆகியோர் அறிமுகமானார்கள். இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘என்னுயிர தோழன்’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பாபு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பாபு சிகிச்சைப் பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்தார்.

அப்போது ’என் உயிர் தோழன்’ பாபு, பாரதிராஜாவை பார்த்து கண்கலங்கி தனது நிலையை எடுத்துச் சொல்லி உதவி கேட்பதும் அதை பார்த்து பாரதிராஜா கண்கலங்குவதுமான காட்சிகள் உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதனை அடுத்து பாரதிராஜா உள்பட திரையுலகினர் விரைவில் பாபுவின் சிகிச்சைக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.