Header Ads

விக்ரமின்’’ கோப்ரா’’ பட டீசர் புதிய சாதனை…



 நடிகர் விக்ரம் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும் கோப்ரா படத்தில் டீசர் கடந்த சனிக்கிழமை

காலை 10 :32 மணிக்கு வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் இப்படத்தின் டீசர் 10மில்லிய ன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கு சில தளர்வுகளுடம் விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9 ஆம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற அறிவிப்பு செய்தனர்.

அதேபோல் கடந்த 09-01-21 காலை 10:32 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியானது.

ஏற்கனவே விக்ரமின் ரசிகர்கள் அவரது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பைப் கொண்டிருந்த நிலையில் அவர்களின் காத்திருப்பை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்த டீசர் அற்புதமாக அமைந்திருந்தது.

எல்லோருக்கும் பிடித்திருந்த கோப்ரா டீசர் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிச் சென்றுகொண்டுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவன 7 ஸ்கிரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது : விக்ரமின் கோப்ரா டீசர் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. என்று நடிகர் விக்ரம் முதல் அனைத்து கலைஞர்களுக்கு இதை டேக் செய்துள்ளது. இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. #CobraTeaser

No comments

Powered by Blogger.