ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் தற்போது நடிக்கும் நகைச்சுவை நடிகர்களில் திறமையான ஒருவராக அடையாளம் காணப்படுபவர் காளி வெங்கட். முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் இவரது திறமையை வெளிச்சம் போட்டு காட்டின. இந்நிலையில் எல்லா கதாநாயகர்களும் ஹீரோவாவது போல இவரும் இப்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.
அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
No comments