Header Ads

ரெண்டிங்கில் பூமி படத்தின் முக்கிய காட்சி!

 


ஜெயம் ரவியின் ‘பூமி’ திரைப்படம் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாகத்தான் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டு இருந்தது.

இந்த நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த பூமி திரைப்படம் திடீரென ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வரும் பொங்கல் தினத்தில்
ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு தற்போது படத்தின் முக்கிய காட்சி ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். விவசாயிக்கும் கார்ப்ரெட்காரர்களுக்கும் இடையில் நடக்கும் அரசியலை வெட்டவெளிச்சமாக்கியுள்ள இந்த காட்சி ட்ரெண்டிங்கில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ லிங்க்…

No comments

Powered by Blogger.