Header Ads

வலிமையில் இணையும் காமெடி டிவி நடிகர்!

 


நடிகர் அஜித்தின் வலிமை பட அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இதுவரை டைட்டில் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் என எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூருக்கு பேனர் எல்லாம் அடித்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வலிமை படம் குறித்து அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. பிரபல டிவி ஷோவான ‘குக்கிங் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான காமெடியனாக வலம் வருபவர் புகழ். இவர் தற்போது அஜித் நடிக்கும் வலிமை படத்தில் காமெடியனாக இணைந்து நடிப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

Pugazh

No comments

Powered by Blogger.