Header Ads

கொரோனாவால் பாடலாசிரியர் மரணம்!

 


கடந்த ஆண்டு வெளியாகி தமிழகம் முழுவதும் பட்டையைக் கிளப்பிய ஜிமிக்கி கம்மல் பாடலை எழுதிய அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.


சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான

ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புமிகப்பெரியது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான மொழி எல்லைகளை தாண்டி பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை மலையாள திரைப் பாடலாசிரியரான அனில் பனசூரன் எழுதி இருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இது மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் அணில் மலையாள சினிமாக்களுக்கு பாடல்களை எழுதி வந்துள்ளார்.

No comments

Powered by Blogger.