அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறாரா?
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத், அந்த படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் விஷ்ணுவர்த்தன் உள்பட பல இயக்குனர்களின் பெயர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அஜித் படத்தை எச்.வினோத் இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அஜித்தின் மூன்று படங்களைத் தொடர்ந்து இயக்கும் இயக்குனர் பட்டியலில் இணைகிறார் எச்.வினோத். இதற்கு முன்னர் அஜித்தின் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய மூன்று படங்களை தொடர்ச்சியாக சிறுத்தை சிவா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது வினோத் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
No comments