சித்ரா கணவர் ஹேமந்த் மீண்டும் கைது
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சித்ராவின் மரணம் குறித்து ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேமந்த் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹேமந்த் மீது புகார் எழுந்துள்ள நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹேமந்த்தை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே சித்ரா தற்கொலை வழக்கில் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டு இருப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments