பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
டாப் ஹீரோ என்ற இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.
இவ்வாறு தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன.
சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments