தளபதி 65 படத்தின் வில்லன் பிரபல ஹீரோவா?
நெல்சன் இயக்கும் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு டிசம்பர் 10ல் வெளியானது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அருண் விஜய் ஏற்கனவே என்னை அறிந்தால் மற்றும் சாஹோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments