Header Ads

சிம்புவின் ‘தல’ டைட்டில்: வைரலாகும் போஸ்டர்!

 



சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’பத்து தல’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தல அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பதால் அவரது படத்தின் டைட்டிலே ’தல’ என வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டிலை பிரபல இயக்குனர்கள் வெங்கட்பிரபு, எம்.ராஜேஷ், ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன் ஆகியோர் தங்களுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்

இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

சிம்புவும் அடுத்த பட டைட்டிலில் தல ரெஃப்ரென்ஸ் இருப்பதை அறிந்து அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிம்புவின் ‘தல’ டைட்டில்: வைரலாகும் போஸ்டர்!

No comments

Powered by Blogger.