Header Ads

பாலாவின் சிரிப்புக்கு பின் இருக்கும் சோகம்

 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய பாலாஜி, தந்திரமாகவும் திறமையாகவும் விளையாடி வருவதாகவும் அவர் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பு உள்ளது என்றும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெறும் அளவுக்கு அவர் தகுதி உடையவர் என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலான நேரங்களில் பாலாஜி சிரித்த முகத்துடன் இருந்தாலும் அவரது சிரிப்புக்கு பின் ஒரு சோக காதல் இருக்கும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே பாலா தனது சக போட்டியாளர்களிடம் தனது காதல் தோல்வி குறித்து கூறி உள்ளார் என்பதும் கால் சென்டர் டாஸ்க்கின் போது அர்ச்சனா இது குறித்த கேள்வியை எழுப்பிய போது அந்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து விட்டதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பாலாவின் காதல் தோல்வி குறித்து சினேகா நாயர் பேட்டி நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: பாலா ஐந்து ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்தார் என்றும் அதன்பின் அந்த பெண்ணுடன் பிரேக்-அப் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளாகி விட்டது என்றும் அவர் கூறினார்.

அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் அந்த திருமணத்தில் பாலாவும் கலந்து கொள்ள தயாராக இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

தான் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நடப்பதை அறிந்து உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அவர் எந்தவித பழிவாங்கும் எண்ணமும் இல்லாமல் அவரை வாழ்த்துவதற்காக அந்த திருமணத்தில் எங்களுடன் சேர்ந்து கலந்து கொள்ள தயாராக இருந்தார் என்றும், ஆனால் அதற்குள் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததால் திருமணத்தின் போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்றும் சினேகா நாயர் இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாலாவின் சிரிப்புக்குப் பின்னால் இப்படி ஒரு சோகமான காதல் கதை உள்ளது என்பது இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.