Header Ads

உலக படவிழாக்களுக்கு செல்லும் சினம்

 


பல விருதுகளை பெற்ற ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் தற்போது இயக்கி வரும் படம் சினம். அருண் விஜய் பாரி வெங்கட் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி அருண் விஜய் கூறியதாவது : சினம் படத்தின் கரு உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது. அதனால் உலக ரசிகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட நினைத்தோம். உலகம் முழுக்க பல்வேறு திரைப்பட விழாக்களில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் சிறப்பு பதிப்பை படக் குழு தீவிரமாக தயாரித்து வருகிறது. படத்தில் ஆக்சனும், உணர்வுகளும் சரிபாதியாக கலந்திருக்கும். அது ரசிகர்களை படமுழுக்க பரபரவென வைத்திருக்குமென நான் நம்புகிறேன். இப்படத்தை 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.

அருண்விஜய் ஏற்கனவே இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் டைட்டில் வைக்கப்படாத அவரது 33வது படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.