ஏ.ஆர் ரகுமான் தாயார் மறைவு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா கரீமா பேகம்(73) உடல்நலக்குறைவால் இன்று(டிச., 28) காலமானார்.
இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இவர், படங்கள், ஆல்பம் என பிஸியாக உள்ளார். இவரது அம்மா கரீமா பேகம்(73). சிறுவயதிலேயே ரஹ்மான் தந்தையை இழக்க நேரிட்டதால் பெரும்பாலும் அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே ரஹ்மானின் அம்மா கரீமா உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று(டிச., 28) காலை அவரது உயிர் பிரிந்தது. பலரும் ரஹ்மானின் அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ரஹ்மான் டுவிட்டரில் தனது அம்மாவின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.
No comments