Header Ads

மீண்டும் தொடங்குகிறதா செல்வராகவனின் கான் ?



 நடிகர் சிம்பு செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த கான் திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

செல்வராகவன் படப்பிடிப்பை தொடங்கி சில நாட்களிலேயே கைவிடப்பட்ட படங்கள் பல. அவற்றில் கான் திரைப்படமும் ஒன்று. சிம்பு நடிப்பில் இந்த படத்தைத் தொடங்கிய செல்வராகவன், சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் இப்போதும் காணக்கிடைக்கிறது.

இந்நிலையில் இப்போது சிம்பு அந்த படத்தை மீண்டும் தொடங்க ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. செல்வராகவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு சிம்பு படத்தையும் மீண்டும் தொடங்க வாய்ப்புக் கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

No comments

Powered by Blogger.