இந்திய ஹீரோவாக உயரும் விஜய்
2020ம் ஆண்டு சினிமாவைப் பொறுத்தவரை ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. கொரானோ தாக்கம் காரணமாக எட்டு மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டாலும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏப்ரல் 9ம் தேதி வெளிவந்திருக்க வேண்டிய விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் 9 மாதங்கள் கழித்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்த படங்கள் பொதுவாக தமிழில் மட்டும்தான் வெளியாகும். சில படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், விஜய் நடித்த படங்கள் இதுவரையில் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியானதில்லை. முதல் முறையாக ‘மாஸ்டர்’ படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகப் போகிறது. இதன் மூலம் இந்திய அளவிலும் புத்தாண்டு முதல் இந்திய ஹீரோவாக உயரப் போகிறார் விஜய். அதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் தமிழ் மொழியைத் தவிர வேற்று மொழிப் படங்களில் நேரடியாக இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
No comments