மாஸ் காட்டும் சிம்பு.... வைரலாகும் புகைப்படம்
சிம்பு நடித்து முடித்துள்ள ’ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அவர் தற்போது ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தனது திரைப்படங்களின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சிம்பு சற்றுமுன் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
நீண்ட தாடியும் மீசையும் கூர்மையான பார்வையும் கொண்ட சிம்புவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின் கெட்டப் ஏற்கனவே பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளிவந்துள்ளது என்பது தெரிந்ததே
ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஸ்டில்களில் முற்றிலும் வித்தியாசமாக நீண்ட தாடியுடன் முறுக்கு மீசையில் இருப்பதால் இந்த படத்தில் அவர் இரட்டைவேடங்களில் நடிக்கிறாரா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்தார் என்பதால் ஒரே படத்தில் இரண்டு கெட்டப்களா? என்ற எண்ணம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிம்புவின் இந்த கெட்டப்பை பார்க்கும்போது ’மாநாடு’ படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்று தான் கூற வேண்டும்


No comments